சினிமா
வெளியானது ‘SK21' பூஜை வீடியோ!
கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘SK21' படத்தின் பூஜை வீடியோ இன்று(மே 5) அப்படக்குழுவினரால் வெளியிடப்பட்டது.
கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘SK21' படத்தின் பூஜை வீடியோவை அப்படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கமல்ஹாசன் கிளாப் போர்டை தட்டி, ஆரம்பிக்க இந்தப் படத்தின் பூஜை சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். மேலும், இந்தப் படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தின் சண்டை காட்சிகளை ஸ்டீபன் ரிட்சர் வடிவமைக்க, கலைவானன் படத்தொகுப்பு செய்கிறார். மேலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து ‘அயலான்’, ‘மாவீரன்’ ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராகியுள்ளது. அதில், ‘அயலான்’ இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகுமென அப்படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.