நடிகர் சிவகார்த்திகேயன், தான் சோசியல் மீடியாவை விட்டு சில நாட்கள் விலகியிருக்கப் போவதாக அறிவித்துள்ளார். அவரின் படங்கள் குறித்த அப்டேட்களை அவரின் படக்குழுவே வெளியிடுமெனவும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்ட பதிவில், ” என் இனிய தம்பி மற்றும் தங்கைகளே, நான் சில காலம் ட்விட்டரை விட்டு விலகியிருக்கவுள்ளேன். என் படம் குறித்த அனைத்து அப்டேட்களும் எனது படக்குழுவே தெரிவிக்கும்” என பதிவிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெகு நாட்களாக தயாரிப்பில் இருந்த ‘அயலான்’ திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. மேலும், மடோன் அஸ்வின் இயக்கத்தில் அவர் நடிக்கும் ‘மாவீரன்’ திரைப்படம் வரும் ஆக.11ஆம் தேதி வெளியாகவுள்ளது.இன்னோரு பக்கம் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசனின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.