சினிமா
மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்கும் சிம்பு
இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் நடிக்க சிம்பு ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் STR 48 திரைப்படத்துக்கு நடிகர் சிம்பு ஆயத்தமாகி வருகிறார். இது ஒரு பீரியட் திரைப்படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இப்படியிருக்க அவர் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித் நடிக்கவிருக்கும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் பணிகள் நிறைவடைந்ததும் இந்த படத்தின் பணிகளை மகிழ் திருமேனி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.