‘ஜெயிலர்’ படத்தின் ஷோகேஸ் இன்று மாலை ரிலீஸ்...குழப்பத்தில் உள்ள ரசிகர்கள்..!

''ஜவான்'' படத்தின் பாணியில் ''ஜெயிலர்''
RAJINI,NELSON
RAJINI,NELSON

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் ஷோகேஸ் (ட்ரெய்லர்) இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 'ஜெயிலர்' படம் 10-ம் தேதி வெளியாகிறது. இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், யோகிபாபு, வசந்த் ரவி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ''காவாலா'' பாடல் ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அடுத்து இரண்டாவது சிங்கிளாக ஹுக்கும் பாடல் ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டத்தை அடைய நிறைய பேர் போட்டி போடுகிறார்கள் என்று சர்ச்சையை கிளப்பியது.மேலும் மூன்றாவது பாடலான ஜுஜுபி'' பாடல் நான் ஒருவன் தான் தலைவன் என்ற வரிகள் தளபதி விஜய்யை வம்பிழுப்பது போல் இருந்தது.அதுமட்டுமில்லாமல் விஜய், ரஜினி ரசிகர்களிடையே மோதலை ஏற்படுத்தியது. ஜெயிலர் படத்தின் பாடல் சர்ச்சையை கிளம்பினாலும் ரசிகர்களிடையே மாஸ் ஹிட்டடித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் சென்னையில் நடைப்பெற்றது. இதில் ரஜினியின் பேச்சு, அவர் சொன்ன குட்டிக் கதை ஆகியவை சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பின.

RAJINI,NELSON
RAJINI,NELSON

இப்படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்று ரஜினி ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் ஷோகேஸ் இன்று (ஆகஸ்ட் 02) மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ட்ரெய்லர் என்று அறிவிக்காமல் ஷோகேஸ் என்று அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்துக்கும் இதே போல நேரடியாக ட்ரெய்லர் என்று குறிப்பிடாமல் ‘ப்ரிவ்யூ’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதே பாணியில் தற்போது ‘ஜெயிலர்’ குழுவினரும் ட்ரெய்லர் என்ற வார்த்தைக்கு பதில் ‘ஷோகேஸ்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com