அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா அருள் மோகனன் ஆகியோர் நடிக்கும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்தாண்டின் மிக எதிர்பார்க்கப்படும் படங்களில் ‘கேப்டன் இல்லர்’ திரைப்படம் மிக முக்கியமான திரைப்படமாகத் திகழ்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அப்படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் தனுஷின் அண்ணனாக சிவராஜ்குமார் நடிப்பதாகவும், சுதந்திரத்திற்கு முன்பு நடைபெறும் கதையாக உருவாகி வரும் இந்தப் படத்தில் தனுஷும் சிவராஜ்குமாரும் சேர்ந்து பிரிட்டிஷை எதிர்த்து போராடுவதாக கதையாக்கப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் டீசர் வரும் ஜூலை 28 ஆம் தேதி வெளியாகுமெனத் தெரிகிறது.