சினிமா
ஜவான் படக்குழுவுக்கு ஷாருக் கான் வைத்த கோரிக்கை
படத்தின் வெளியீடு குறித்து ஜவான் படக்குழுவுக்கு நடிகர் ஷாருக் கான் ஒரு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
அட்லீ இயக்கத்தில், ஷாருக் கான், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜவான்’. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இத்திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.
பதான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஷாருக் கான் நடிப்பில் வெளியாகவிருக்கும் முதல் திரைப்படமாக இது இருப்பதால் வெளியீடு தேதியில் அதிக கவனம் செலுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகிவரும் ’அனிமல்’, பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் ’சலார்’ போன்ற படங்களின் வெளியீட்டை மனதில் கொண்டு ‘ஜவான்’ திரைப்படத்தை செப்டம்பர் மாதத்தின் இடையில் வைத்துக் கொள்ளலாம் என்று ஷாருக் கான் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.