சினிமா
செல்வராகவன் நடிக்கும் தெலுங்கு திரைப்படம்!
தெலுங்கு இயக்குநர் நாதன் ரங்கா இயக்கத்தில், செல்வராகவன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் செல்வராகவன் சமீபகாலமாக சில படங்களில் நடித்து வருகிறார். ‘பீஸ்ட்’, ‘சாணி காயிதம்’, ‘நானே வருவேன்’, ‘பகாசூரன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் செல்வராகவன். இந்நிலையில், அடுத்ததாக ஒரு தெலுங்கு படத்தில் செல்வராகவன் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் நாதன் ரங்கா இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில், செல்வராகசனோடு சேர்ந்து யோகி பாபு, சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படம் குறித்த ஏனைய அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளது.