சினிமா
ச.நா - துருவ் விக்ரம் இணையும் ஆல்பம் பாடல்!
துருவ் விக்ரமும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் இணைந்து ‘பூ மடியே’ எனும் ஆலப்ம் பாடல் ஒன்றை தயாரித்துள்ளனர்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் , நடிகர் துருவ் விக்ரமும் இணைந்து ஒரு ஆல்பம் பாடலை தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், விக்ரம் - துருவ் விக்ரம் நடித்து வெளியான ‘மகான்’ திரைப்படத்தில் ‘மிஸ்ஸிங் மீ’ என்கிற பாடலில் துருவ் விக்ரமும் சந்தோஷ் நாராயணனும் இணைந்து பணியாற்றியிருப்பார்கள். இந்நிலையில், மீண்டும் ’பூமடியே’ எனும் ஆல்பம் பாடலுக்காக இந்த இருவரும் இணையவுள்ளனர்.
பாடலாசிரியர் விவேக், இந்தப் பாடலை எழுதியுள்ளார். இந்தப் பாடலில் துருவ் விக்ரம் நடித்தது மட்டுமல்லாது இயக்கியுமுள்ளார். இந்தப் பாடல் வீடியோ நாளை வெளியாகவுள்ளது. மறுபக்கம், துருவ் விக்ரம் மாரிசெல்வராஜோடு இணைந்து ஒரு படத்தில் கபடி வீரராக நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.