சினிமா
திட்டமிட்டபடி ‘சலார்’ வெளியாகும்
‘சலார்’ திரைப்படம் திட்டமிட்டபடி செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் திரைப்படம் ‘சலார்’. படம் அறிவிக்கப்பட்டதில் இருந்து இத்திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.
சில காரணங்களால் இதன் வெளியீடு தேதி தள்ளிப்போகலாம் என்று சினிமா வட்டாரங்களில் பேச்சு எழுந்தது. இப்படியிருக்க திட்டமிட்டபடி செப்டம்பர் 28ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.