’சலார்’ டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
’சலார்’ டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கன்னட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபஸ், பிரித்திவிராஜ் சுகுமாரன் ஆகியோர் நடிக்கும் படம் ‘சலார்’. இந்தப் படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்தப் படத்தின் டிரெய்லர் ரிலீஸ் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லரை வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் அப்படக்குழு வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே வெளியான டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும், பல லட்சப் பார்வையாளர்களைக் கடந்து யூடியூபில் சாதனை படைத்து வருகிறது. கன்னடம் - தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படம் தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்படவுள்ளது. மேலும், இந்தப் படத்தில் சுருதி ஹாசன், சிரியா ரெட்டி, ஜகபதி பாபு, மாது குருசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com