ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சஷிகாந்த் முதல் முறையாக ‘டெஸ்ட்’ எனும் படத்தில் இயக்குநராக களமிறங்கவுள்ளார் என ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில், இந்தப் படத்தில் பாடகி சக்தி ஸ்ரீஇ கோபாலன் இசையமைப்பாளராக அறிமுகமாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் குரலில், சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் -2’ படத்தில் இடம்பெற்ற ’அகநக’ பாடல் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
மேலும், இந்தப் படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் பெங்களூரில் நடக்கவுள்ளது. இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகுமெனத் தெரிகிறது. இந்தப் படத்தை இயக்கும் சஷிகாந்த், ‘தமிழ் படம்’ ,’விக்ரம் வேதா’ , ‘இறுதி சுற்று’ ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார். மேலும், தேசிய விருது பெற்ற ‘மண்டேலா’ படத்தையும் தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.