சினிமா
லோகேஷ் படத்திற்கு போட்டோஷூட் நடத்திய ரஜினிகாந்த்
லோகேஷ் இயக்கும் படத்திற்கு ரஜினிகாந்த் போட்டோஷூட் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் மிகமுக்கிய இயக்குநர்களில் ஒருவராக லோகேஷ் கனகராஜ் வளர்த்துள்ளார். இந்நிலையில் ரஜினி நடிப்பில் லோகேஷ் ஒரு படத்தை இயக்கப்போவதாக கூறப்பட்டது.
தற்போது ‘ஜெயிலர்’ பணிகளில் பிசியாக இருக்கும் ரஜினி, லோகேஷ் இயக்கவிருக்கும் திரைப்படத்திற்கு போட்டோஷூட் நடத்தியதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அவர் விரைவில் மும்பையில் நடைபெற்று வரும் ‘லால் சலாம்’ திரைப்படத்தின் பணிகளை தொடங்குவார் என்று கூறப்படுகிறது.