ரஜினியின் நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் நாளை மறுநாள் திரையில் வெளியாகவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜெயிலர் படத்தில் இருந்து வெளியான பாடல்கள் ரசிகர்களிடம் அமோகமான வரவேற்பை பெற்றுள்ளது. முதலில் காவாலா என்ற பாடல் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்த நிலையில் அடுத்ததாக ஹுக்கும் என்ற மாஸான பாடல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து 'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் சென்னையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. மேலும் கடந்த வாரம் 'ஜெயிலர்' படத்தின் ட்ரைலர் வெளியானது. செம மாஸாக ஸ்டைலிஷாக வெளியான ஜெயிலர் ட்ரைலரை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். கதையை கணிக்கமுடியாத வகையில் நெல்சன் ஜெயிலர் ட்ரைலரை உருவாக்கியது தான் ஹைலைட்டான விஷயமாக அமைந்தது. இதெல்லாம் ஜெயிலர் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது
'ஜெயிலர்' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருவதால் இப்படத்தின் முன்பதிவும் அமோகமாக இருந்து வருகின்றது. தமிழ்நாடு மற்றும் இந்தியாவை தாண்டி அயல்நாடுகளிலும் 'ஜெயிலர்' பட்டத்திற்கான முன்பதிவு சிறப்பாக இருந்து வருகின்றது. முன்பதிவின் மூலமே பலகோடி வசூலை ஜெயிலர் திரைப்படம் ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 'ஜெயிலர்' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருவதால் இப்படத்தின் முன்பதிவும் அமோகமாக இருந்து வருகின்றது. தமிழ்நாடு மற்றும் இந்தியாவை தாண்டி அயல்நாடுகளிலும் 'ஜெயிலர்' பட்டத்திற்கான முன்பதிவு சிறப்பாக இருந்து வருகின்றது. 'ஜெயிலர்' படத்தில் நடித்த மிர்னா சமீபத்தில் இப்படத்தை பற்றி பேசியுள்ளார். அவர் கூறியதாவது; 'ஜெயிலர்' படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக வரும் காட்சிகள் ரசிகர்களுக்கு கண்டிப்பாக சர்ப்ரைஸாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் படத்தில் பல சர்ப்ரைஸான விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த விஷயங்கள் எல்லாம் ரசிகர்களை கண்டிப்பாக ஈர்க்கும் என்றார் மிர்னா. இதைத்தொடர்ந்து 'ஜெயிலர்' திரைப்படத்தில் ரஜினி போலீஸ் வேடத்தில் வருவதை காண ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து இருக்கின்றனர்.
'ஜெயிலர்' திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் போலீஸ் கதாப்பாத்திரத்தில் வரும் ரஜினி ரசிகர்களை மிரட்டுவாரா, முத்துவேல் பாண்டியன் ஜெய்லராக வந்து ரசிகர்களை மனச் சிறையில் வைப்பாரா ரசிகர்களை தாண்டி, திரையுலகமே ஜெயிலர் முத்துவேல் பாண்டியனைப் பார்க்க ஆவலாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் 'தலைவர் 170' படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.