நேருக்கு நேர் மோதும் ரஜினி - தனுஷ்....உச்சகட்ட பரபரப்பில் கோலிவுட்..!

ஜெயிலருடன் நேரடியாக மோதும் கேப்டன் மில்லர்
ரஜினிக்கு போட்டியாக தனுஷ்
ரஜினிக்கு போட்டியாக தனுஷ்

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். மோகன்லால், ஷிவ்ராஜ்குமார், ஜாக்கி ஷாரூப் என இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளதால் ஜெயிலர் ஒரு பான் இந்திய படமாக உருவெடுத்துள்ளது. இந்தப் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு துவங்கியுள்ளது.

சென்னையில் வரும் ஜூலை 28 ஆம் தேதி மிகப்பிரம்மாண்டமாக ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. ஜெயிலர் படத்தில் இருந்து காவாலா மற்றும் ஹுக்கும் பாடல் ரசிகர்கள் இடையே மாஸ் ஹிட்டடித்துள்ளது. இந்நிலையில் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் இப்படத்தின் டீசர் வெளியிட போவதாக தகவல்கள் பரவி வருகின்றன.

அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில்,தனுஷ் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி வரும் திரைப்படம் கேப்டன் மில்லர்.மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகிவரும் இப்படம் தீபாவளி அல்லது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்நிலையில் ஜூலை 28 தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளதுஅதே தேதியில் ரஜினியின் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறவுள்ளது.

ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவின் பரபரப்பை குறைக்கவே தனுஷ் கேப்டன் மில்லர் டீசரை வெளியிடுவதாக சிலர் கூறி வருகின்றனர்.தனுஷ் வேண்டுமென்றே ரஜினியிடம் மோதுகிறார் என்று நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.ஆனால் ஜூலை 28 தனுஷின் பிறந்த நாள் என்பதால் கேப்டன் மில்லர் டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் வேறு காரணம் எதுவும் இல்லை என படக்குழு அறிவித்துள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com