’குக் வித் கோமாளி’ புகழ் கதாநாயகனாக களமிறங்கும் ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’!

இயக்குநர் சுரேஷ் இயக்கத்தில் ‘குக் வித் கோமாளி’ புகழ் முதன்முதலாக கதாநாயகனாக நடிக்கும் ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.
’குக் வித் கோமாளி’ புகழ் கதாநாயகனாக களமிறங்கும் ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’!

விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் புகழ். இந்நிலையில், தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இயக்குநர் ஜே.சுரேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ எனும் படத்தில் வனப்பூங்கா காதுகாப்பாளராக நடிக்கிறார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், ’என் கனவை நினைவாக்கிய படம், முதன்முதலாக திரையில் கதையின் நாயகனாக நான்.

நிஜ புலியுடன் நடித்தது மறக்கமுடியாத ஒன்று. இந்த வாய்ப்பை எனக்கு வழ்ங்கிய இயக்குநர் சுரேஷ், தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. இசை அமைத்துக் கொடுத்த யுவன் சாருக்கு எனது மிகப் பெரிய நன்றிகள். என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வரும் ரசிகர்களுக்கு நன்றி, தொடர்ந்து உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்தப் படத்தின் இயக்குநர் சுரேஷ், இதற்கு முன்பு மாதவன் நடித்த ‘என்னவளே’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படட்தில் சிரின் கன்ச்வாலா கதாநாயகியாக நடிக்கிறார். ‘சைக்கோ’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த தன்வீர் மிர், இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com