மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜெயம்ரவி, ஆகியோர் நடித்த ‘பொன்னியின் செல்வன் - 2’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. பலதரப்பட்ட விமர்சனங்களைத் தாண்டி வசூல் ரீதியாகவும் உலகெங்கும் பல சாதனைகளைப் படைத்து வருகிறது. ஏற்கனவே இந்தப் படம் 100கோடி கிளப்பில் இணைந்துவிட்டதாக அப்படக்குழுவால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது உலகெங்கும் வ்சூலில் மற்றுமொரு சாதனையைப் படைத்துள்ளது.
அதுபடி, இந்தப் படம் உலகெங்கும் 200 கோடி ரூபாய் வசூல் சாதனையைத் தற்போது படைத்துள்ளது. இந்தப் படம் ஓவர்சீஸில் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெறுமென எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தற்போது வரை இத்தகைய சாதனையைப் படைத்துள்ளது. மேலும், வருங்காலங்களில் இந்தப் படம் இன்னும் பல சாதனைகளைப் படைக்குமெனவும் தெரிகிறது. ஆக, இந்தாண்டில் வெளியான படங்களிலேயே மாபெரும் வசூல் படைத்த படமாக ‘பொன்னியின் செல்வன் -2’ நிச்சயம் இருக்குமென கோலிவுட் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.