நேக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் ஆகிய உச்ச நட்சத்திரங்கள் நடித்து வரும் திரைப்படம் ‘பிராஜெக்ட் கே’. மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வந்தது.
இந்நிலையில் படப்பிடிப்பின்போது அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டது இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. 2 மாதங்கள் ஆகியும் இன்னும் அமிதாப் பச்சன் படப்பிடிப்புக்கு திரும்பாத நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகவிருந்த இத்திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அமிதாப் பச்சன் முழு உடற்தகுதி பெறும் வரை படக்குழு காத்திருக்க தயாராக இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் தங்களுடைய மற்ற படங்களின் பணிகளை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.