சினிமா
பிரேம் ஜீ நடிக்கும் ’சத்திய சோதனை’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியீடு!
இயக்குநர் சுரேஷ் சங்கய்யா இயக்கத்தில் பிரேம்ஜீ நடிக்கும் ‘சத்திய சோதனை’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகவுள்ளது.
இயக்குநர் சுரேஷ் சங்கய்யா இயக்கத்தில் பிரேம்ஜீ நடிக்கும் ‘சத்திய சோதனை’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகவுள்ளதாக அப்படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சுவயம் சித்தா, ரேஷ்மா பசுபுலேட்டி, லக்ஷ்மி, ஹரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் இயக்குநர் இதற்கு முன்பு 2017இல் வெளியான ‘ஒரு கிடாயின் கருணை மனு’ என்கிற படத்தை இயக்கியவர் ஆவார். இந்தப் படம் விமர்சகர்களின் மிகுந்த பாராட்டுகளைப் பெற்றது. ரகுராம் இசையமைக்கும் இந்தப் படத்தில் கங்கை அமரன் ஒரு பாடலை பாடவுள்ளார்.