சினிமா
இறுதிகட்டப் படப்பிடிப்பில் பவன் கல்யாணின் ‘ஓஜி’!
தெலுங்கு சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான பவன் கல்யாணின் ‘ஓஜி’ திரைப்படம் தற்போது இறுதிகட்டப் படப்பிடிப்பில் உள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.
தெலுங்கு சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான பவன் கல்யாணின் ‘ஓஜி’ திரைப்படம் தற்போது இறுதிகட்டப் படப்பிடிப்பில் உள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. இந்தப் படத்தை இதற்கு முன்பு பிரபாஸை வைத்து ‘சாஹோ’ என்கிற படத்தை இயக்கிய சுஜித் இயக்குகிறார்.
மேலும், இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியங்கா அருள் மொகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ரவி .கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மேலும், மறுபக்கம் பவன் கல்யாண் தமிழில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற ‘வினோதய சித்தம்’ படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.