சினிமா
பசுபதி கதையின் நாயகனாக நடிக்கும் ‘தண்டட்டி’
பசுபதி - ரோகினி இணைந்து நடிக்கும் ‘தண்டட்டி’ திரைப்படம் வரும் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நடிகர்கள் பசுபதி, ரோகினி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘தண்டட்டி’ திரைப்படம் வரும் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகுமென அப்படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்தத் தேதியில் வெளியாகுமென சரியான எந்த அறிவிப்பும் இல்லை. இந்தத் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்குகிறார். இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் விரைவில் வெளியாகுமெனத் தெரிகிறது. மேலும், இந்தப் படத்தில் விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இண்ட்ய்ஹப் படம் கிராமத்து காமெடி ட்ரில்லராக இருக்குமென கோலிவுட் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.