சினிமா
கன்னட படத்தில் நடிக்கும் பார்த்திபன்!
கன்னட இயக்குநர் சூன்யா இயக்கத்தில் உருவாகும் ‘ரோஸி’ படத்தில் பார்த்திபன் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கன்னட இயக்குநர் சூன்யா இயக்கத்தில் உருவாகும் ‘ரோஸி’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் யோகி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தின் இயக்குநர் சூன்யா இதற்கு முன்பு தனஞ்சய் நடிப்பில் ‘ஹெட் புஷ்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். மேலும், இந்த ரோஸி திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுத்துள்ள திரைப்படம் எனவும் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் ஆனந்த் சுந்தரேசன் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.