சினிமா
ஒபீலி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் ‘பான் இந்திய’ திரைப்படம்!
இயக்குநர் ஒபீலி கிருஷ்ணா அடுத்ததாக ஒரு பான் இந்திய திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
இயக்குநர் ஒபீலி கிருஷ்ணா இயக்கத்தில், சிலம்பரசன் நடித்து சமீபத்தில் வெளியான ‘பத்து தல’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைத் தாண்டி, வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து, தற்போது ஒபீலி கிருஷ்ணா குலோபல் ஒன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தோடு இணைந்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படம் ஒரு பான் இந்தியப் படமாக உருவாகவுள்ளது.
இதுகுறித்து ஒபீலி கிருஷ்ணா பேசுகையில், “குலோபல் ஒன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தோடு இணைவதில் மிக சந்தோஷம். தரமான படங்கள் மீது அவர் பெரும் ஆர்வமிக்கவராக உள்ளார். இந்தப் படம் நிச்சயமாக சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதுவித அனுபவமாக இருக்கும்” எனத் தெரிவித்தார். இந்தப் படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.