கேஜிஎஃப் திரைப்படத்தை இயக்கிய பிரசாந்த் நீல்- ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து பணியாற்றவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் நடிக்கவுள்ள, பணியாற்றவுள்ள ஏனைய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகுமெனத் தெரிகிறது. ஜூனியர் என்.டி.ஆர் தற்போது கொர்டலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘தேவரா’ படத்தில் நடிக்கிறார்.
அந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் சயிப் அலி கான் ஓர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மறுபக்கம், பிரசாந்த் நீல், பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ’சலார்’ பட வேலைகளில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறார். அந்தப் படம் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.