‘கடைசி விவசாயி’, ‘ராக்கெட்ரி’ படங்களுக்கு தேசிய விருது- மத்திய அரசு அறிவிப்பு

சிறந்த நடிகையாக ஆலியாபட், கீர்த்தி சனோன் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய விருதுகள் அறிவிப்பு
தேசிய விருதுகள் அறிவிப்பு

2021ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் பட்டியலில் கடைசி விவசாயி, ராக்கெட்ரி இடம்பெற்றுள்ளன. அதேபோல் 6 விருதுகளை அள்ளி ஆர்.ஆர்.ஆர் சாதனை படைத்துள்ளது.

2021ஆம் ஆண்டிற்கான 69வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டது. அதில் சிறந்த தமிழ் படமாக ’கடைசி விவசாயி’அறிவிக்கப்பட்டது. அதில் நடித்த மறைந்த நல்லாண்டிக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் சண்டை வடிவமைப்பாளர் சிங் சாலமன், நடன இயக்குநர் பிரேம் ரக்‌ஷித், தொழில் நுட்ப கலைஞர் சீனிவாஸ் மோகன்,இசையமைப்பாளர் கீரவாணி உள்பட 6 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி படம் சிறந்த படமாக தேர்வாகி உள்ளது. சிறந்த நடிகராக புஷ்பா திரைப்படத்தில் நடித்த அல்லு அர்ஜூனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகையாக ஆலியாபட், கீர்த்தி சனோன்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போல் சிறந்த தேசிய படமாக தி காஷ்மீர் பைல்ஸ் படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.கருவறை ஆவணப்படத்திற்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.சிறந்த கல்வி திரைப்படமாக ’சிற்பங்களின் சிற்பங்கள்’ ஆவணப்படத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சிறந்த பாடகி ஸ்ரேயா கோஷல் (மாயவா... - இரவின் நிழல்)தமிழ் பாடலுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு மாநில மொழி படங்களுக்கும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com