சினிமா
நகுலின் ‘வாஸ்கோடகாமா’ படப்பிடிப்பு நிறைவு..!
நடிகர் நகுல் நடிப்பில், வெகு நாட்களாக படப்பிடிப்பில் நிழுவையில் இருந்த ‘வாஸ்கொடகாமா’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
வெகுநாட்களாக படப்பிடிப்பில் நிழுவையில் நீடித்து வந்த நடிகர் நகுல் நடிக்கும் ‘வாஸ்கோடகாமா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒருவழியாக நிறைவைடைந்துள்ளது. காமெடி படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஆர்.ஜி.கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
இந்நிலையில், நகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவுடன் கேக் வெட்டும் புகைப்படத்தை பதிவிட்டு, இந்தப் படம் நிறைவடைவதாகத் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், மொட்டை ராஜேந்திரன், முனிஷ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு அருண் என்.வி இசையமைக்க, வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.