கவின் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘டாடா’ திரைப்படம் மக்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அடுத்ததாக கவின், நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் எனத் தகவல் வெளியானது. மேலும், இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளாதகவும் பரவலாகப் பேசப்பட்டது. இந்தப் படத்தில் ‘அயோத்தி’ படத்தில் நடித்த பிரீத்தி அஸ்ரானி கவினுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இந்நிலையில், இந்தப் படத்திற்கு பொருத்தம் என சதீஷ் யோசித்து வைத்திருந்த தலைப்பை மிஷ்கின் வைத்துள்ளது சதீஷுக்கு தெரியவந்தது. இருவரும் தற்போது ஒன்றாக ‘லியோ’ படத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், சதீஷும் அப்படக்குழுவினரும் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, மிஷ்கின் அந்த தலைப்பை சதீஷுக்கே தந்துள்ளார் என கோலிவுட் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்குமெனத் தெரிகிறது.