இசையமைபாபளர் தேவாவின் மகனும், இசையமைப்பாளருமான ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இசையமைப்பாளர் தேவா, கானா பாடலுக்கு பெயர் போனவர். கானா பாடல் மட்டுமல்ல தேவா இசையமைக்கும் மெலோடி பாடலும் தனித்துவமாக இருக்கும். அவரது பழைய பாடலுக்கு இப்போதும் ரசிகர் கூட்டம் இருக்கிறது.
இந்நிலையில் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா "கருவறை" என்ற ஆவணப்படத்திற்கு இசையமைத்திருந்தார். அந்த படத்தை இ.வி.கணேஷ் பாபு இயக்கியுள்ளார். இதையடுத்து குமுதம் யூட்யூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார் ஸ்ரீகாந்த் தேவா. பேட்டியில், ரொம்பவே நெகிழ்வுடனும் மகிழ்ச்சியுடனும் பல சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
மேலும் அப்பா கண்கலங்கிவிட்டார், நான் விருது வாங்கியிருந்தால் கூட இவ்வளவு சந்தோஷம் அடைந்திருக்க மாட்டேன் என்று தேவா நெகிழ்ந்து பேசிய தருணங்களை பேட்டியில் பகிர்ந்துள்ளார் ஸ்ரீகாந்த் தேவா. அதுமட்டுமல்லாது பல சுவாரஸ்ய விஷயங்களையும் பகிர்ந்துள்ளார்.
முழு வீடியோவையும் பார்க்க: Click Here