கொரியாவில் ரீமேக்காகும் ‘டிரிஷ்யம்’!

மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியான ‘ட்ரிஷ்யம்’ திரைப்படம், தற்போது கொரிய மொழியில் ரீமேக்காகவுள்ளது.
கொரியாவில் ரீமேக்காகும் ‘டிரிஷ்யம்’!

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன் லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘டிரிஷ்யம்’. இந்தத் திரைப்படம் தமிழில் கமல்ஹாசன் நடிப்பில், ‘பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக்கானது.

அந்த வெற்றியைத் தொடர்ந்து, கன்னடத்தில் ‘டிரிஷ்யா’, தெலுங்கில் ‘டுருஷ்யம்’, இந்தியில் ‘டிரிஷ்யம்’, சிங்களத்தில் ‘தர்ம யுத்தாயா’, சீனாவில் ‘ஷீப் விட் ஔட் ஏ ஷெப்பர்ட்’ என உலகெங்கும் பல்வேறு மொழிகளில் ரீமேக்கானது.

இந்நிலையில், தற்போது இந்தத் திரைப்படம் தென் கொரியாவில் ரீமேக்காகவுள்ளது. இந்தப் படத்தை பிரபல கொரிய இயக்குநர் கிம் - ஜி - வூன் இயக்குகிறார். ‘பாரசைட்’ படத்தில் நடித்த சோங் காங் ஹோ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com