சினிமா
மே 18 வெளியாகும் ‘மாடர்ன் லவ் சென்னை’ ஆண்டாலஜி
'மாடர்ன் லவ் சென்னை' ஆண்டாலஜி தொடர் மே 18ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இயக்குநர் ஜான் கார்னி இயக்கத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பான அந்தாலஜி தொடர் ‘மாடர்ன் லவ்’. இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பு இருந்த நிலையில் இந்த தொடர் ‘மாடர்ன் லவ் மும்பை’ என்று இந்தியிலும், ‘மாடர்ன் லவ் ஐந்தரபாத்’ என தெலுங்குவிலும் ரீமேக் செய்யப்பட்டது.
தற்போது இந்த தொடர் ‘மாடர்ன் லவ் சென்னை’ என தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த தொடர் மே 18ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரை தியாகராஜன் குமாரராஜா, பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜூமுருகன், கிருஷ்ணகுமார், அக்ஷய சுந்தர் ஆகியோர் இயக்கியுள்ளனர், இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஜிவி.பிரகாஷ், ஷான் ரால்டன் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.