சினிமா
’மாவீரன்’ திரைப்பட ரிலீஸ் தேதியில் மாற்றம்!
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ திரைப்படம் ஆக.11ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த ரிலீஸ் தேதி, ஜூலை 17ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தப் படம் தெலுங்கில் ‘மஹவீருடு’ என்கிற பெயரில் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்கிறார். மேலும், இந்தப் படத்தில் மிஷ்கின், சரிதா, யோகி பாபு, சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வித்து அய்யன்னா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்கிறார். இந்தப் படம் மடோன் அஸ்வின் தேசிய விருது பெற்றதற்கு பிறகு வெளியாகும் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.