சினிமா
‘லியோ’ அப்டேட் கொடுத்த நடிகர் மேத்யூ தாமஸ்
‘லியோ’ திரைப்படத்தை பற்றிய குட்டி அப்டேட்டை நடிகர் மேத்யூ தாமஸ் கொடுத்துள்ளார்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துவரும் ‘லியோ’ திரைப்படம், அறிவிக்கப்படுவதற்கு முன்னரே ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிந்த நிலையில், சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இப்படியிருக்க இத்திரைப்படத்தை பற்றிய சில தகவல்களை நடிகர் மேத்யூ தாமஸ் கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தனக்கு தமிழ் சரியாக தெரியாதது சற்று கடினமாக இருந்தது என்று குறிப்பிட்ட அவர், லோகேஷ் அதை சாமர்த்தியமாக சமாளித்ததாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் தான் ‘க்ளீன் ஷேவ்’ லுக்கில் இருப்பதாகவும், தனக்கு ஒரு தங்கை கதாபாத்திரம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அவர் கொடுத்த இந்த தகவலை சமூகவலைதளங்களில் விஜய் ரசிகர்கள் ‘டீகோட்’ செய்து வருகின்றனர்.