ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் ஆகியோர் நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதுபடி, அந்தத் திரைப்படம் வரும் ஜூலை 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தப் படத்தில் சுனில், அபிநயா, கிங்ஸ்லீ, ஒய்.ஜீ.மகேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜீ.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய, சண்டைக் காட்சிகளை கனல் கண்ணன் மற்றும் பீட்டர் ஹெய்ன் இணைந்து அமைத்துள்ளனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.