சினிமா
இறுதிகட்ட டப்பிங் வேலைகளில் ‘மார்க் ஆண்டனி’ !
இயக்குநர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் மார் ஆண்டனி படத்தின் இறுதிகட்ட டப்பிங் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இயக்குநர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் நடிக்கும் ‘மார் ஆண்டனி’ படத்தின் இறுதிகட்ட டப்பிங் வேலைகள் நடைபெற்று வருகிறது. நடிகர் விஷால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் டப்பிங் செய்யும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். டைம் டிராவலை மையமாகக் கொண்டு உருவாகும் சைன்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமான இந்தப் படத்தின் டிரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
மேலும், இந்தப் படத்தில் விஷால், எஸ்.ஜே சூர்யா ஆகிய இருவரும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்தப் படத்தில் சுனில், அபிநயா, ரிது வர்மா, ரெடின் கிங்ஸ்லீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.