சினிமா
‘மாமன்னன்’: மாரி செல்வராஜின் யூனிவர்ஸ்?
மாரி செல்வராஜ் புதிய யூனிவர்ஸ் ஒன்றை தொடங்கவுள்ளதாக சமூகவலைதளங்களில் பேச்சு தொடங்கியுள்ளது
மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி, வடிவேலு, ஃபகத் ஃபாசில் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘மாமன்னன்’. இத்திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
இப்படியிருக்க இத்திரைப்படத்தின் புகைப்படங்கள் நேற்று சமூகவலைதளங்களில் வெளியானது. அதில் குறிப்பிட்ட ஒரு படத்தில், நடிகர் லாலின் முகத்தை வடிவேலு தன்னுடைய கையில் பச்சைக்குத்தியது ரசிகர்களின் பார்வையில் பட்டது. கர்ணன் திரைப்படத்தில் ஏமராஜா கதாபாத்திரத்தில் லால் நடித்திருந்ததால், மாமன்னன் கர்ணன் படத்தின் யூனிவர்சில் வரும் என்று ரசிகர்கள் தங்கள் தியரிகளை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.