தமிழில் வெளியாகும் மனோஜ் பாஜ்பாயின் ‘சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை’!

கோர்ட் டிராமா ஜானரில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை வரும் ஜூன் 7ஆம் தேதி முதல் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஜீ 5 ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிறது.
தமிழில் வெளியாகும் மனோஜ் பாஜ்பாயின் ‘சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை’!

பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் நடிப்பில், இயக்குநர் அப்புர்வ் சிங் கார்க்கி இயக்கத்தில் ’ சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை ( Sirf Ek Bandaa Kaafi Hai)’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் கடந்த மே 23 ஆம் தேதி வெளியானது. கோர்ட் டிராமா ஜானரில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை வரும் ஜூன் 7ஆம் தேதி முதல் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஜீ 5 ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் , விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தப் படம் குறித்து நடிகர் மனோஜ் பாஜ்பாய், “இப்படம் ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் திரைத்துறையில் உள்ள எனது நண்பர்கள் என அனைவரிடமும் மிகப்பெரிய பாராட்டுக்களைப் பெற்றதில் நான் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளேன். சமூக அக்கறையுடன் மிக முக்கியமான விஷயத்தைக் கையாளும் படத்துக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பது பெருமைக்குரிய விஷயம். இது அனைத்து மொழிகளிலும் உள்ள ரசிகர்களை இணைக்கும் படைப்பு. தென்னிந்தியப் பார்வையாளர்கள் இப்படத்திற்கு எத்தகைய வரவேற்பைத் தருவார்கள் என்பதைக் காண நான் மிகுந்த ஆவலோடு இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com