சினிமா
மனோபாலா மறைவிற்கு மம்முட்டி அஞ்சலி
மறைந்த நடிகர் மனோபாலாவிற்கு மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மறைந்த காமெடி நடிகர் மற்றும் இயக்குநர் மனோபாலாவின் மறைவிற்கு மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னுடைய நெருங்கிய நண்பரும் சகக் கலைஞருமான மனோபாலாவின் மறைவு பற்றிய செய்தி கேட்டு மிகுந்த சோகமடைந்தேன். அன்னாரது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” எனப் பதிவிட்டுள்ளார். மனோபாலா இதுவரை 300க்கும் ஏற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் 24 படங்களை இயக்கியுள்ளார். அவரது மறைவிற்கு தொடர்ந்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.