சினிமா
மே 19ஆம் தேதி வெளியாகும் ‘மாமன்னன்’ முதல் சிங்கிள்
மாமன்னன் திரைப்படத்தின் முதல் பாடல் மே 19ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘மாமன்னன்’. இத்திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியிருக்க இத்திரைப்படத்தின் முதல் சிங்கிள் மே 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை வடிவேலு பாடியுள்ளார்.