விரைவில் வெளியாகும் ‘மாமன்னன்’ ஃபர்ஸ்ட் சிங்கிள்!

மாமன்னன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை வடிவேலுவே பாடியுள்ளார்
விரைவில் வெளியாகும் ‘மாமன்னன்’ ஃபர்ஸ்ட் சிங்கிள்!

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாமன்னன்’ திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகவிருப்பதாக அப்படக்குழுவினரால் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தப் பாடலை வடிவேலுவே பாடியுள்ளதாகவும் இயக்குநர் மாரி செல்வராஜ் ட்வீட்  செய்துள்ளார்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்தப் படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை யுக பாரதி எழுத, சாண்டி நடனம் அமைத்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com