சினிமா
‘பிச்சைக்காரன் 2’ திரைப்படத்தில் நடிக்க மகேஷ் பாபு ஏற்றவர்
‘பிச்சைக்காரன் 2’ திரைப்படத்தில் நடிகர் மகேஷ் பாபு ஏற்றவர் என்று விஜய் ஆண்டனி கூறியுள்ளார்
விஜய் ஆண்டனி இயக்கத்தில், விஜய் ஆண்டனி, காவ்யா தாப்பர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிச்சைக்காரன் 2’. இத்திரைப்படம் மே 19ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
இப்படியிருக்க இத்திரைப்படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில் ஒருவர் தெலுங்குவில் இத்திரைப்படத்தை நடிக்க ஏற்ற நடிகர் யார் என்று கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த விஜய் ஆண்டனி, இந்த கதைக்கு தேவையான எக்ஸ்பிரெஷன், ரியாக்சன் எல்லாவற்றையும் கொடுக்க ஏற்றவர் மகேஷ் பாபு தான் என்று கூறினார்.