சினிமா
'மாவீரன் டிரெய்லர் ரிலீஸ் எப்போது..?
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படம் வரும் ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், அந்தப் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி வரும் ஜூலை 2ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் டிரெய்லரும் அதே நாளில் வெளியாகவுள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்தப் படத்திலிருந்து இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.