சினிமா
மீண்டும் ‘மாவீரன்’ வெளியீட்டு தேதியில் மாற்றம்?
‘மாவீரன்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
மடோன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘மாவீரன்’. இப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியது.
இத்திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ள நிலையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படியிருக்க சில காரணங்களுக்காக படத்தின் வெளியீடு ஜூலை மாதத்திற்கு மாற்றப்படும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.