சினிமா
ஜூன் 1 பிரமாண்டமாக நடைபெறும் மாமன்னன் இசை வெளியீட்டு விழா
‘மாமன்னன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் பல படங்களில் இதுவும் ஒன்று.
இப்படியிருக்க இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஜூன் 1ஆம் தேதி நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல் ஆகியோர் பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.