சினிமா
'யோகி பாபு அழுதா நாங்க அழுதுருவோம்'- லக்கி மேன் திரைப்பட குழு
நடிகர் யோகி பாபு நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் "லக்கி மேன்" திரைப்படத்தின் டீம் இன்டர்வியூ.
நடிகர் யோகி பாபு நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த கதாநாயகனாகவும், குணசித்திர நடிகராகவும் தன்னுடைய தனித் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அவரது நடிப்பில் இதற்கு முன் வெளியான "மண்டேலா", "பொம்மை நாயகி" உள்ளிட்ட திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் மீண்டும் கதாநாயகனாக "லக்கி மேன்" படத்தில் நடித்துள்ளார் யோகி பாபு. இந்த படத்தை பாலாஜி வேணுகோபால் இயக்கியுள்ளார். பாலாஜி வேணுகோபால் "நண்பன்", "தாண்டவம்" உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். "லக்கி மேன்" படக்குழுவினர் குமுதம் யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளனர்.
முழு வீடியோவை பார்க்க: Click Here