சினிமா
’லியோ’-வில் நடிக்கிறாரா லோகேஷ் கனகராஜ்..!?
லியோ திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ‘லியோ’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், தற்போது இந்தப் படம் குறித்த தகவல் ஒன்று கோலிவுட் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது. ஏற்கனவே லோகேஷ் - விஜய் இதற்கு முன்பு இணைந்த ‘மாஸ்டர்’ படத்தின் கிளைமாக்ஸில் லோகேஷ் கனகராஜ் நடித்திருப்பார். அதைத் தொடர்ந்து, இந்தப் படத்திலும் நடிக்கிறாராம் லோகேஷ் கனகராஜ்.
இதற்கிடையில்,ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்திலும் கௌரவ தோற்றம் அளிக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். மேலும், சண்டைக் காட்சி அமைப்பாளர்கள் அன்பு - அறிவு இயக்கும் படத்தில் லோகேஷ் கனகராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.