சினிமா
‘சிங்கப்பூர் சலூன்’ படப்பிடிப்பை நிறைவு செய்த லோகேஷ்
‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பை லோகேஷ் கனகராஜ் நிறைவு செய்துள்ளார்
கோகுல் இயக்கத்தில், ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் படம் ‘சிங்கப்பூர் சலூன்’. லியோ திரைப்பட பணிகளில் பிசியாக இருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இத்திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார். அவர் ஒரு ரியாலிட்டி ஷோவில் வரும் விருந்தினராக இத்திரைப்படத்தில் தோன்றியுள்ளதாக கூறப்படுகிறது.
இத்திரைப்படத்தில் நடிகர் ஜீவாவும் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த மேலும் பல அப்டேட்டுகள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.