விஜய் சேதுபதியை போலவே.., ஓவர் பிசியில் தனுஷ்...சில மாதங்கள் தனுஷை பார்க்க முடியாது..!

ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்க திட்டமிட்டு இரவும், பகலும் தீயாக வேலை செய்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ்...
DHANUSH
DHANUSH

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். இதையடுத்து பா.பாண்டி படத்தை தொடர்ந்து 'டி50' படத்தை இயக்கி வருகிறார். பா. பாண்டியை போன்றே 'டி50' படமும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'டி50' படத்திற்காக சுமார் 500 வீடுகள் கட்டியிருக்கிறார்கள். கால, நேரம் பார்க்காமல் படப்பிடிப்பு நடந்து வருகிறது. டிசம்பர் மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டிருக்கிறார் தனுஷ். அதனால் இரவும், பகலும் பிரேக்கே இல்லாமல் வேலை செய்யப் போகிறாராம். 'டி50' படத்தை இயக்குவதுடன் அதில் நடிக்கவும் செய்கிறார் தனுஷ். ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்க திட்டமிட்டு இரவும், பகலும் தீயாக வேலை செய்து கொண்டிருக்கிறார் தனுஷ். 'டி50' படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோரும் நடித்து வருகிறார்கள். 'டி50' படத்தில் தன் குருவும், அண்ணனுமான செல்வராகவனை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார் தனுஷ். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடி யார் என்பது இதுவரை எந்த தகவலும் வெளி வரவில்லை.

DHANUSH
DHANUSH

'டி50' படத்தில் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக நடிக்கிறார் அபர்ணா பாலமுரளி. காளிதாஸுக்கு ஜோடியாக அனிகா நடிப்பதாக கூறப்படுகிறது. தனுஷ் இயக்கி வரும் 'டி50' படத்திற்கும் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மெய்ன் பாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ். இந்த படத்திற்கும் ஏ. ஆர்.ரஹ்மான் தான் இசையமைக்கிறார். தேரே இஷ்க் மெய்ன் படத்தை அடுத்து சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்கிறார். அந்த படத்தில் தனுஷ் ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் நடிக்கவிருக்கும் தேரே இஷ்க் மெய்ன் இந்தி படத்தில் முன்னதாக விக்கி கௌஷல் நடிக்கவிருந்தாராம். ஆனால் அவர் நடிக்க முடியாமல் போக அந்த வாய்ப்பு தனுஷுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

கர்ணனை அடுத்து மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். அந்த படத்தில் நடிப்பதுடன் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரிக்கவும் செய்கிறார். கோலிவுட்டில் விஜய் சேதுபதியை போலவே தனுஷும் பிசியாகி விட்டார். ரசிகர்கள் இதெல்லாம் இருக்கட்டும் கேப்டன் மில்லர் அப்டேட் அருண் மாதீஸ்வரன் கொடுத்தல் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். நடிப்பின் அசுரனான தனுஷின் கேப்டன் மில்லரின் ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் இதுவரை பார்த்திராத தனுஷை இதில் பார்க்க முடிகிறது என்று கூறி வருகிறார்கள்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com