நடிகை திரிஷா இன்று(மே 4) தனது 40ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார் . இந்நிலையில், அவருக்கு ‘லியோ’ படக்குழுவினர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட ஒரு எக்ஸ்லூசிவ் ஸ்டில்லையும் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த ஸ்டில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவி வருகிறது. இந்தப் படம் திரிஷாவின் 67ஆவது படமாகும்.
அதுமட்டுமின்றி, 14 ஆண்டுகள் கழித்து விஜய்யும் திரிஷாவும் இணைந்து நடிக்கும் படமும் ‘லியோ’ தான். கடைசியாக இருவரும் சேர்ந்து நடித்த படம் ‘குருவி’. லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ திரைப்படம் வரும் அக்.19ஆம் தேதி உலகெங்கும் வெளியாகவுள்ளது. அந்தப் படத்தின் படப்பிடிப்பும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், திரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் - 2’ திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.