சினிமா
லியோ திரைப்படம் மிகப்பெரிய வசூல் பெறும்: வெங்கட் பிரபு நம்பிக்கை
லியோ திரைப்படம் மிகப்பெரிய வசூலை ஈட்டும் என்று இயக்குநர் வெங்கட் பிரபு நம்பிக்கை தெரிவித்துள்ளார்
வெங்கட் பிரபு இயக்கத்தில், நாக சைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கஸ்டடி’. இப்படத்தின் ப்ரொமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஆந்திராவில் நடைபெற்ற ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் ‘பான் இந்தியா’ திரைப்படங்கள் பற்றி இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், பாகுபலிக்கு பின்னர் தான் இந்த ‘பான் இந்தியா’ என்ற வார்த்தை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. விரைவில் தமிழிலும் இது போன்ற ஒரு படம் வரும்.
குறிப்பாக ‘லியோ’ திரைப்படம் அதில் முக்கியமானது. ஏனெனில் அதில் பல உச்சநட்சத்திரங்கள் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜுக்கு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தமிழ் சினிமாவுக்கு ஒரு மார்வெல் யூனிவர்ஸ் போன்று லோகேஷ் யூனிவர்ஸ் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.