ஜெயிலர் வசூலை ‘லியோ’ முறியடிக்கும் - ஸ்டண்ட் மாஸ்டர் தவசி ராஜ் பேட்டி

லியோ படத்தை அனைத்து தரப்பும் பார்க்கலாம்.
ஸ்டண்ட் மாஸ்டர் தவசி ராஜ்
ஸ்டண்ட் மாஸ்டர் தவசி ராஜ்

லியோ’ படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது என ஸ்டண்ட் மாஸ்டர் தவசி ராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டண்ட் மாஸ்டர் தவசி ராஜ் நமது குடிதம் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ”லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களாக கைதி, மாஸ்டர் பார்த்துள்ளேன். லியோ பட காட்சிகளை காஷ்மீரில் எடுத்தபோது தொழிலாளர்களின் கஷ்டத்தை வீடியோவாக எடுத்து காட்டிய போது, ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவிடம் கேட்டு படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டேன்.

லோகேஷ் கனகராஜ் வெளியில் இருந்து பார்த்த அப்போ வேற மாதிரி இருந்தது. அவர்கூட ஒர்க் பண்ண ஆரம்பித்த பின் வேற மாதிரி இருக்கிறது. படத்தின் சண்டை காட்சிகளை எடுத்தவுடன் பார்க்க சூப்பராக இருந்தது. இது எனக்குள் படத்தை உடனே பார்க்க வேண்டும் என ஆசை ஏற்பட்டு விட்டது என கூறியுள்ளார்.

அதேபோல் லோகேஷ் கனகராஜ் அதிகமாக அலட்டிக்கொள்ளாமல் திட்டமிட்டு சரியாக வேலை பார்க்கிறார். ஒரு ஷாட் தனக்கு இப்படி தான் வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார். தேவையில்லாத ஆங்கிள்கள் வேண்டாம் என்பார். செட்டில் தேவையற்ற எதாவது நமக்குள் அருகிலே இருக்கும். நமக்கு தெரியாது, ஆனால் தூரத்தில் இருக்கும் லோகேஷ் அதை பார்க்க சொல்வார். தன் கண் ஆசைவால் அனைத்தையும் உன்னிப்பாக பார்க்கக்கூடியவராக உள்ளார்.

அதேபோல் பெரிய ஹிட் கொடுத்த இயக்குநர் என்பதெல்லாம் இல்லாமல் எளிமையாக இருப்பார்.இவையெல்லாம் தான் அவரை ரசிக்க வைத்தது என தெரிவித்துள்ளார்.

வெளியில் இருந்து பார்த்த போது நல்ல இயக்குநராக தெரிந்தார். படத்தில் வேலை பார்த்த பின்னர் நல்ல மனிதராக லோகேஷ் கனகராஜ் தெரிகிறார் என்றார்.

மாஸ்டர் படத்தை போன்று இந்த படத்திலும் ஸ்கிரிப்ட் பேப்பரை விஜய்க்கு கொடுத்தாக எனக்கு தெரியவில்லை. இந்த படத்திலும் ஸ்கிரிப்ட் பேப்பரை நான் பார்க்கவில்லை. லோகேஷ் மண்டையில் ஸ்கிரிப்ட் ஓடிக்கொண்டே இருக்கும். படப்பிடிப்பிற்கும் வரும் போதே தயாராக தான் வருவார். அவர் ஒரு யானை என்றால் கூட இருப்பவர்களும் 10 பேரும் 10 யானைக்கு சமம். தன்னுடன் சரியான டீம்மை வைத்துள்ளார்.

லியோ’ படத்தை பற்றி ஏன் இவ்வளவு பேசுகிறேன் என்றால், 24 தொழிற் சங்கங்களுக்கு வேலை வாய்ப்பை கொடுக்கும் வகையில் அவரின் கற்பனை திறன் உள்ளது.ஆகையால் அதைத்தான் வியந்து பாராட்ட வேண்டி உள்ளது.

விஜய் எப்படி ஃபிட்னஸா இருக்காறோ அதேபோல் தான் அர்ஜுனும் இருப்பாரு.இருவரும் 30 ஆண்டுகளாக தெரியும். லியோ படத்தை அனைத்து தரப்பும் பார்க்கலாம். நம்மை காக்கும் தெய்வங்களே ஆயுதத்தை வைத்திருக்கின்றன. ஆகையால் ஆயுதம் வைத்திருப்பது எல்லாம் பிரச்னை இல்லை.

விக்ரம் படத்தின் வசூலை ஜெயிலர் முந்தியது போல் நிச்சயம் ஜெயிலர் பட வசூலை லியோ முந்தும்” என ஸ்டண்ட் மாஸ்டர் தவசி ராஜ் தெரிவித்துள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com