சினிமா
’அண்ணன் நான் வரவா..?’ ; அரசியலை குறிக்கிறதா ‘லியோ’ சிங்கிள்?
விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடலான ‘நான் ரெடி’ பாடலின் புரோமோ அப்படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடலான ‘நான் ரெடி’ பாடலின் புரோமோ அப்படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புரோமோவில் ‘நான் ரெடி தான் வரவா.....?, அண்ணன் நான் தனியாய் வரவா..?’ எனும் வரிகள் மூலம் விஜய் தனது அரசியல் பிரவேசத்தை குறிக்கிறாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.
சமீபத்தில் பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியரை சந்தித்து அவர்களுக்கு தனது மன்றத்தின் சார்பில் பரிசு வழங்கினார். இந்த நிகழ்வு அவரது அரசியல் பிரவேசத்தின் ஆரம்பப் புள்ளி என ரசிகர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், இத்தகைய வரிகள் கொண்ட புரோமோ வீடியோ ரசிகர்கள் மத்தியில் மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.